Posts

Showing posts from 2025

ஏகலைவன் (EKALAIVAN)

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் . குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான் . ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன் . இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான் . இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது . வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன் .

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ( BAVANI SANGAMESWARAR TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகும் . இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலமாகும் . இத்தல இறைவர் சங்கமேஸ்வரர் , அளகேசன் , சங்கமநாதர் , மருத்துவலிங்கம் , வானிலிங்கேஸ்வரர் , வக்கிரேஸ்வரன் , நட்டாற்றீஸ்வரன் , திருநண்ணாவுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் . கோயிலின் தல விருட்சம் இலந்தை மரம் ஆகும் . இத்தல அம்மை வேதநாயகி , பவானி , சங்கமேஸ்வரி , பண்ணார் மொழியம்மை , பந்தார் விரலம்மை , மருத்துவ நாயகி வக்கிரேஸ்வரி எனப் பல பெயர்களில் அன்புடன் அழைக்கப்படுகிறார் . இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு . இதைச் சுற்றிலும் நாககிரி , வேதகிரி , மங்களகிரி , சங்ககிரி உள்ளது . வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது . இங்கு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிவதில்லை . அது போல தென்னகத்தில் காவிரியுடன் பவானி மற்றும் அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன . இதில் அமிர்த நதி கண்ணுக்குத்...

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)

Image
முருகனின் அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது . இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் " சேயோன் " எனக் குறிப்பிடப்படுகிறது . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000, 3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது . முருகப் பெருமானின் படை வீடுகள் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும் . திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள் . தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் என்றும் , சமஸ்கிருத நூல்களில் ஜெயந்தி புரம் , சிந்துபுரம் என்றும் , பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்தேவி மங்கலம் என்றும் , திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றது . நக்கீரர் , அருணகிரி நாதர் போன்றோர் திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர் . தல வரலாறு அக்காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல ...

கேதார்நாத் ஆலயம் (KEDARNATH TEMPLE)

Image
  இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிர்லிங்க சிவத்தலங்களில் ஒன்று கேதார்நாத் கோவில் ஆகும். இவ்வாலயம் உத்திராகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஆறு மாதங்கள் மட்டுமே (ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரை) பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியில் உள்ள உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.   இக்கோவில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோவிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ நடைபயணமாகவோ அல்லது குதிரையிலோ அல்லது பல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும். இக்கோவில் திருஞான சம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரப் பாடல் பாடப் ப...

மச்சாவதாரம் (MACHA AVATHAARAM)

Image
  தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சாவதாரம் ஆகும். "உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது, தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் இப்புவியில் அவதாரம் எடுக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர் பரம்பொருள் திருமால். இப்பூவுலகினைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை அவர் எடுத்தார். சிறப்புக்கள் மிக்க திருமாலின் அவதாரங்களை தசாவதாரம் என்று கூறுவர்.  திருமால் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு உபதேசம் செய்தார். அப்பொழுது சுகப்பிரம்மரைப் பார்த்து பரீட்சித்து மகாராஜா, "பிரம்ம ரிஷியே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கின்ற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார்" என்று கேட்டார்.   அதற்கு சுகப்பிரம்மர் கூறியதாவது:  "மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள்.   பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந...

கும்பகர்ணன் வதைப் படலம்

      இராவணன்   கும்பகர்ணனை அழைத்து வருமாறு பணியாளரை அனுப்பினான் . அவர்கள் கும்பகர்ணன் அரண்மனையை அடைந்தனர் .

மகாபாரதத்தில் அம்பை (AMBA IN MAHABHARATA)

  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இதில் வரும் பெண் கதாபாத்திரமாகிய அம்பை பற்றி இப்பதிவில் காண்போம். அம்பை காசி மன்னனின் மூத்த புதல்வி ஆவார். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகளாவர். காசி மன்னன் தன் புதல்விகள் மூவருக்கும் திருமணம் செய்விக்க வேண்டி, சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பல அரசர்கள் காசிக்கு வந்திருந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்து விசித்திரவீரியனும், அவனுக்குத் துணையாக பீஷ்மரும் காசிக்குச் சென்றிருந்தார்கள்.   விசித்திரவீரியன் இளைஞன் ஆதலால் அவனை அரசனாக வைத்து, அரச காரியங்களையெல்லாம் பீஷ்மரே செய்து வந்தார். பீஷ்மருடைய சொல்லை வேதவாக்காக ஏற்று விசித்திரவீரியன் அரசாட்சி புரிந்து வந்தான்.  காசி மன்னனின் சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்த பீஷ்மரைக் கண்டு, அங்கு வந்திருந்த மன்னர்கள் "கிழவராகிய பீஷ்மர் ஏன் வந்துள்ளார்? தனது பிரம்மச்சரிய விரதத்தை காற்றில் பறக்க விட்டார் போலும்" என மெல்லப் பேசிக் கொண்டார்கள். ஆனால் பீஷ்மர், காசி மன்னனின் மகள்கள் மூவரையும் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியே சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்தார். இவ்வாறி...

மயிலாப்பூர் கபாலிஸ்வரர் ஆலயம் (KAPALEESWARAR TEMPLE)

Image
சென்னையில் உள்ள முதன்மையான ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமாகும் . மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது . இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகும் . மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இத்தலம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது .                              பல்லவர் காலத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மயிலைக் கபாலீஸ்வரை வணங்கி தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார் . பின்னாளில் 16 ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இக்கோவிலை அழித்து விட்டார்கள் . பல பத்தாண்டுகள் ஆண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது . சப்த சிவத்தலங்கள் மயிலாப்பூர் பகுதியில் ஏழு சிவாலயங்கள் சப்த தலங்களாக உள்ளன . கபாலீஸ்வரர் ஆலயம் , வெள்ளீஸ்வரர் ஆலயம் , காரணீஸ்வரர் ஆலயம் , தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் , விருபாட்சீஸ்வரர் ஆலயம் , வாலீஸ்வரர் ஆலயம் , மல்லீஸ்வரர் ஆல...