ஆழ்கடலில் ஒலி மாசு என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது . ஒரு காலத்தில் ஆழ்கடலானது திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இவற்றின் பாடல் ஒலியினால் நிறைந்திருந்தன . ஆனால் இப்போது மனிதர்களால் இயக்கப்படும் சாதனங்களினால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது .
சீனாவின் வடமேற்குப் பகுதியில் தக்லமக்கான் பாலைவனம் (TAKLAMAKAN DESERT) அமைந்துள்ளது . தற்போது இப்பாலைவனப் பகுதியை மாபெரும் பசுமை வளையமாக சீனா மாற்றியுள்ளது . சீனா தனது மாபெரும் திட்டமாகிய பாலைவனத்தைப் பசுமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது . தக்லமக்கான் பாலைவனத்தைச் சுற்றிலும் 3000 கி . மீட்டர் நீளமுள்ள மரங்களால் ஆன பசுமை வளையத்தை சீனா அமைத்துள்ளது .
பம்பை நதிக் கரையில் இராமரும், இலக்குவரும் நீராடினர். பின் சவரி கூறியப் பாதையில் சென்று இரிசியமூக மலையை அடைந்தனர். இராமரும். இலக்குவரும் வருவதனைக் கண்ட சுக்ரீவன், தன்னைக் கொல்ல வாலி அனுப்பிய நபர்களோ என அஞ்சினான். எனவே குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல் மா வ ட்டத்தில் அமைந்துள்ள சிவாலயம் யாகந்தி உமா மகேஸ்வரர் கோயிலாகும் . விஜயநகரப் பேரரசின் அரசனான ஹரிஹர புக்க ராயரால் 15 ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது . இக்கோயில் வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ளது .
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம் இராமேசுவரம் ஆகும் . கடல் பரப்புகளால் சூழப்பட்ட சிறிய தீவுதான் இராமேசுவரம் . அழகிய கட்டிடக் கலைக்கும் , நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றாக இராமேஸ்வரம் விளங்குகிறது . இராமாயண காவியத்தின் பழமை எவ்வளவோ , அவ்வளவு பழமையானது இராமேசுவரம் ஆலயமாகும் .
இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான். இராவணன் தன் அமைச்சர்களோடு ஆலோசித்தான். பிறன் மனை அபகரிப்பது அழிவில் கொண்டு சேர்க்கும் என அமைச்சர்கள் கூற்றினை இராவணன் ஏற்கவில்லை. இராவணனின் தாய் வழி மாமன் மாரீசன். அவன் விசுவாமித்திரர் யாகம் செய்த போது, தொல்லை செய்ததால் இராமரின் அம்பு பட்டு கடலில் ஒளிந்து கொண்டான்.
இராமர், சீதையுடனும். இலக்குவனுடனும் தண்டகாரண்ய காட்டினுள் பயணத்தைத் தொடர்ந்தார். ஏராளமான புண்ணிய நதிகளில் நீராடியும், முனிவர்களின் ஆசிகளைப் பெற்றும் பயணத்தைத் தொடர்ந்தனர் . தண்டகாரண்யம் மிகப் பெரும் காடு. இங்கு பல ஆண்டுகள் பழமையான வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. விந்திய, சாத்பூரா மலைகள் அருகே உள்ளன.