சீனாவின் மாபெரும் பசுமை வளையம்
சீனாவின் வடமேற்குப் பகுதியில் தக்லமக்கான் பாலைவனம் (TAKLAMAKAN DESERT)அமைந்துள்ளது. தற்போது இப்பாலைவனப் பகுதியை மாபெரும் பசுமை வளையமாக சீனா மாற்றியுள்ளது. சீனா தனது மாபெரும் திட்டமாகிய பாலைவனத்தைப் பசுமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. தக்லமக்கான் பாலைவனத்தைச் சுற்றிலும் 3000 கி.மீட்டர் நீளமுள்ள மரங்களால் ஆன பசுமை வளையத்தை சீனா அமைத்துள்ளது.
தக்லமக்கான் பாலைவனம் "மரணக் கடல்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகின் இரண்டாவது நகரும் பாலைவனமாக உள்ளது. தக்லமக்கான் என்றால் "திரும்ப வர முடியாத இடம்" என்பது பொருளாகும். மரணக் கடல் என்றழைக்கப்படும் இப்பாலைவனம், பெரும்பாலும் நகரக் கூடிய மணல் திட்டுக்களைக் கொண்டது. இங்கு வீசும் காற்றினால் மணல் திட்டுக்கள் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும். குளிர் காலத்தில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.
சீனா 1978ம் ஆண்டு (THREE-NORTH-SHELTERBELT) என்ற பசுமை திட்டதை உருவாக்கியது. 2024 ம் ஆண்டு இறுதியில் இத்திட்டம் முடிவடைந்தது. இதன் நோக்கம் பாலைவனமாதலைத் தடுப்பதும், மணல் புயல்களைத் கட்டுப்படுத்துதலும், மேலும் அப்பகுதியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.
1978 ல் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 46 ஆண்டுகள் இடைவிடாத முயற்சியின் மூலம் "பசுமை வளையம்" என்னும் இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இத்திட்டத்தின் நன்மைகள் பலவாகும். மரணக் கடல் என்றழைக்கப்படும் அந்தப் பகுதி வாழக் கூடிய இடமாக மாறியுள்ளது. உள்ளூர் மக்களின் விவசாயத்தை மேம்படுத்தி, பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கித் தருகிறது.
இத்திட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை இப்பகுதியில் மூன்று கோடிக்கும் அதிகமான மரங்களை சீனா நட்டுள்ளது. ஆனாலும் இத்திட்டத்திற்கு ஏற்பட்ட சவால்கள் அதிகம். சீனா தக்லமக்கான் பாலைவனத்தில் உருவாக்கிய இப்பசுமை வளையம் அதன் நீண்ட கால திட்டமிடுதலுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் உலகின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் பொறியியல் திட்டமாகக் கருதப்படுகிறது.


Comments
Post a Comment