ஆழ்கடலில் ஒலி மாசு (OCEAN NOISE)
ஆழ்கடலில் ஒலி மாசு என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் ஆழ்கடலானது திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இவற்றின் பாடல் ஒலியினால் நிறைந்திருந்தன. ஆனால் இப்போது மனிதர்களால் இயக்கப்படும் சாதனங்களினால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
வணிக நோக்கங்களுக்காக 2,50,0000 க்கும் அதிகமான கப்பல்களும், சரக்குக் கப்பல்களும் கடலில் பயணிக்கின்றன. இதன் ஒலி ஆழ்கடலில் பெரும் பாதிப்புக்களை உருவாக்குகின்றன. வணிகக் கப்பல்கள், படகுகள், கப்பல் போக்குவரத்து இயந்திரங்களின் சத்தம் தொடர்ந்து கடலில் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
கடலுக்கடியில் கனிம வளங்களைத் தேடும் போது பயன்படுத்தப்படும் "சிஸ்மிக் ஏர் கன்ஸ்" (Seismic air guns) எனப்படும் வெடிப்புக் கருவிகள் பெருமளவு ஒலியை உண்டாக்குகின்றன. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் சோனார் கருவிகள் அதிகளவு ஒலியை உண்டாக்குகின்றன.
கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், காற்றாலைகள் இவற்றாலும் ஒலி மாசுபாடு உண்டாகின்றது.
ஆழ்கடலில் ஒலி மாசுபாடு; இதனால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்;
கடல் உயிரினங்கள் இருள் சூழ்ந்த ஆழ்கடலில் வாழ்வதற்கு ஒலியை நம்பி உள்ளன. திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளவும், இரை தேடவும், வழி கண்டறியவு ஒலியைப் பயன்படுத்துகின்றன. மனிதனால் உண்டாக்கப்படும் இரைச்சல் இவற்றின் வாழ்வைப் பாதிக்கின்றது.
கடல் ஒலி மாசு மற்றும் அதிக சத்தம் காரணமாக திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்கின்றன. இதனால் இவை கரை ஒதுங்கி இறக்கின்றன.
மனித இரைச்சல் காரணமாக ஆழ்கடல் உயிரினங்கள் தன் துணையைத் தேடவும், உணவு தேடவும் முடியாமல் தவிக்கின்றன. மேலும் அவ்வுயிரினங்கள் தங்களுக்கு ஏற்படும் அபாயங்களை உணரவும் முடியவில்லை.
ஆழ்கடலில் ஒலி மாசுபாட்டை குறைக்க செய்ய வேண்டியவை;
கப்பல் வேகத்தைக் குறைப்பதன் மூலம் அதிக ஒலி மாசினைக் குறைக்க முடியும்.
அறிவியல் வளர்ச்சியின் மூலம், புதிய கண்டுபிடிப்புகளால் குறைந்த ஒலியை உண்டாக்கும் கப்பல் இயந்திரங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்துதல்.
கடல் சார் பாதுகாக்கப்பட்ட இடங்களை உருவாக்கி (MARINE QUIET ZONE) அதிகளவு ஒலி இரைச்சலைத் தடுத்து கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கலாம்.


Comments
Post a Comment