மயிலாப்பூர் கபாலிஸ்வரர் ஆலயம் (KAPALEESWARAR TEMPLE)
சென்னையில் உள்ள முதன்மையான ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமாகும். மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகும். மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இத்தலம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது.
பல்லவர் காலத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மயிலைக் கபாலீஸ்வரை வணங்கி தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பின்னாளில் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்
இக்கோவிலை அழித்து விட்டார்கள். பல பத்தாண்டுகள் ஆண்டுகள்
கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது.
சப்த
சிவத்தலங்கள்
மயிலாப்பூர்
பகுதியில் ஏழு சிவாலயங்கள் சப்த தலங்களாக உள்ளன. கபாலீஸ்வரர் ஆலயம், வெள்ளீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம், விருபாட்சீஸ்வரர் ஆலயம், வாலீஸ்வரர் ஆலயம், மல்லீஸ்வரர் ஆலயம் என்று ஏழு சிவாலயங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது. இவற்றை சப்த ரிஷிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கவுதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ராம்
பிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கியதாகவும் கூறப்படுகிறது.
வேதங்கள்
பூஜித்ததால் வேதபுரி என்றும், சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் வழங்கப்படுகிறது.
தல
வரலாறு
இறைவி
உமையம்மை மயில் வடிவம் கொண்டு சிவபெருமானை வணங்கியதால் மயிலாப்பூர் என்ற பெயர் இத்தலத்திற்கு வழங்கப்படுகின்றது. திருக்கோயில் சன்னதியில் உள்ள தல விருட்சத்தின் அடியில்
இத்தல புராணக் காட்சி கல்லில் செதுக்கப்பட்டுள்ளதைக் காண முடியும். சிவனார் ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் உன்னதத்தையும் உமையாளுக்கு விளக்கிய போது, உமையம்மை அங்கே சிறகு விரித்தாடும் மயிலின் மேல் தன் கவனத்தைச் சிதற விட்டார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் உமையம்மையை மயிலாக மாறும் படி செய்து விட்டார். பின் அச்சாபம் நீங்க தொண்டை நாட்டிற்குச் சென்று தவம் செய்யும் படி கூறினார். மயில் உருக் கொண்ட இறைவி உமையம்மை இத்தலத்தில் உள்ள சிவனாரை வணங்கி சாப விமோசனம் பெற்றாள்.
எனவே
இத்தலம் மயிலாப்பூர் என வழங்கப்படுகிறது. இவ்வாறு மயிலைத்
திருத்தலமானது கபாலீஸ்வரம் என அழைக்கப்படுவதற்கான மற்றொரு தல
புராணமும் உள்ளது. பிரம்மன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அதை அடக்க எண்ணிய சிவனார் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தில் ஏந்தினார். கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என்று அழைக்கப்படுகிறார்.
பூம்பாவை
வரலாறு
திருஞான
சம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சிவநேசர் என்ற சைவர் வாழ்ந்து வந்தார். அவர் தனது மகளான பூம்பாவையை சம்பந்தருக்கு மணம் செய்து கொடுக்க எண்ணி இருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணின் உடலை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார்.
திருஞான சம்பந்தர் மயிலாப்பூர் வந்த போது, சிவநேசர் அவரைச் சந்தித்து, நிகழ்ந்தவற்றைக் கூறினார். பின் பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன்பு வைத்து, தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர் பெற்று எழ வைத்ததாகவும், அப்பெண்ணை
அக்கோயிலை தொண்டாற்றுமாறு கூறிச் சென்றதாகவும் ஒரு தொன் நம்பிக்கை உள்ளது. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் பூம்பாவைக்கு சிறு கோயில் உள்ளதைக் காண முடியும்.
பங்குனி
உத்திர விழா
இக்கோயிலில்
பங்குனி உத்திர பெரு விழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான, அறுபத்து மூவர் திருவிழாவின் போது, கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தைக் காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்.
மயிலையில்
வீற்றிருக்கும் கற்பகாம்பாள் உடனமர் கபாலீசுவரரை வணங்கி நலங்கள் பலவும் பெறுவோமாக.
Comments
Post a Comment