Posts

இராமநாதசுவாமி திருக்கோயில் (RAMESWARAM TEMPLE)

Image
  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம் இராமேசுவரம் ஆகும் . கடல் பரப்புகளால் சூழப்பட்ட சிறிய தீவுதான் இராமேசுவரம் . அழகிய கட்டிடக் கலைக்கும் , நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றாக இராமேஸ்வரம் விளங்குகிறது . இராமாயண காவியத்தின் பழமை எவ்வளவோ , அவ்வளவு பழமையானது இராமேசுவரம் ஆலயமாகும் .

இராமாயணம்-ஆரண்ய காண்டம் (பகுதி -2) RAMAYANAM- ARANYA KANDAM

Image
                 இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான்.  இராவணன் தன் அமைச்சர்களோடு ஆலோசித்தான். பிறன் மனை அபகரிப்பது அழிவில் கொண்டு சேர்க்கும் என அமைச்சர்கள் கூற்றினை இராவணன் ஏற்கவில்லை. இராவணனின் தாய் வழி மாமன் மாரீசன். அவன் விசுவாமித்திரர் யாகம் செய்த போது, தொல்லை செய்ததால் இராமரின் அம்பு பட்டு கடலில் ஒளிந்து கொண்டான்.

இராமாயணம்- ஆரண்ய காண்டம் (பகுதி -1) RAMAYANAM- ARANYA KANDAM

Image
            இராமர், சீதையுடனும். இலக்குவனுடனும் தண்டகாரண்ய காட்டினுள் பயணத்தைத் தொடர்ந்தார். ஏராளமான புண்ணிய நதிகளில் நீராடியும், முனிவர்களின் ஆசிகளைப் பெற்றும் பயணத்தைத் தொடர்ந்தனர் . தண்டகாரண்யம் மிகப் பெரும் காடு. இங்கு பல ஆண்டுகள் பழமையான வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. விந்திய, சாத்பூரா மலைகள் அருகே உள்ளன.

ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)

Image
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார் . இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8 ம் தேதியன்று , இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் , பிராங்கு , இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் . இவர் 1959 ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன் , தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார் . பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் .

இராமாயணம்- அயோத்தியா காண்டம் (RAMAYANAM- AYODHYA KANDAM)

Image
  இராமரும் சீதையும் பன்னிரெண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்ந்து வந்தனர். தயரதன் தன் புதல்வர்களில் இராமனிடம் பெரும் அன்பு பூண்டிருந்தான்.

இராமாயணம் - பால காண்டம் (RAMAYANAM- BALA KANDAM)

Image
                                                                                                         பாலகாண்டம்        கோசல நாடு நீர் வளமும் நில வளமும் மிக்க நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த கோசல நாட்டில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் மக்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எல்லோருடைய சிந்தையிலும் செம்மைப் பண்பு இருந்ததால் சினம் இல்லை. நாட்டில் மக்கள் நல்லறம் புரிந்து இனிதே வாழ்ந்து வந்ததால் எங்கும் ஏற்றம் அல்லது இறக்கம் இல்லை.

மானசரோவர் (MANSAROVAR)

Image
  உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும் . இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது .

அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

Image
  இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது .

முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)

Image
  முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும் . இம்மழையானது பெரும்பாலும் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும் . முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அதிகமாக நிகழ்கின்றது . சுமார் இருபது முதல் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.

திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்- THIRUTHTHANI MURUGAN TEMPLE

Image
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் .