Posts

மானசரோவர் (MANSAROVAR)

Image
  உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும் . இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது .

அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

Image
  இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது .

முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)

Image
  முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும் . இம்மழையானது பெரும்பாலும் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும் . முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அதிகமாக நிகழ்கின்றது . சுமார் இருபது முதல் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.

திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்- THIRUTHTHANI MURUGAN TEMPLE

Image
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் .

ஔவையும் முருகனும் - AVVAIYAR MURUGAN

  தமிழ் போற்றும் பெண்பாற் புலவர் ஔவையார் . இவரின் சிறப்பியல்புகள் எண்ணற்றவை . தமிழறிவுடன் பிறந்த ஔவை கவி பாடுவதில் வல்லவர் . அறம் , பொருள் , இன்பம் , வீடு என அனைத்தும் உணர்ந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்துள்ளனர் . முருகனுடன் பாடி உள்ளம் மகிழ்ந்த ஔவை சங்க காலத்தைச் சேர்ந்தவர் . இவர் அதியமான் காலத்தைச் சார்ந்தவர் . பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் " கொன்றை வேந்தன் " என்னும் நீதி நூலை எழுதி உள்ளார்.

கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல்

சின்னக் கண்ணனின் குறும்புகள் அனைத்துமே படிப்பவர் , கேட்பவர் என அனைவர்   உள்ளத்தையுமே கவரக்கூடியது என்றால் அது மிகையாகாது . கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றினை இப்பதிவில் காண்போம் . விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தினை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என அறிந்த இந்திரன் மிகவும் கோபம் கொண்டான் . எனவே இந்திரன் தனது கோபத்தை விருந்தாவனத்தின் மக்கள் மீது காட்டினான் . யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என இந்திரன் அறிந்திருந்தாலும் , நந்த கோபர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் மேல் தன் கோபத்தைக் காட்டினான் . தானே மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவனும் , கோபம் கொண்டவனுமான இந்திரன் பிரளயத்தைச் செய்யக் கூடியதுமாண " ஸாம் வர்த்தகம் " என்னும் மேகக் கூட்டத்தை அழைத்தான் . விருந்தாவணத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் " ஸாம் வர்த்தக " மேகத்துக்குக் கட்டளையிட்டான் . இவ்வாறு இந்திரனால் கட்டளையிடப்பட்டு ஏவப்பட்ட மேகக் கூட...

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு . 

வாலி வதைப் படலம்

              இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை

அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது .   இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.

திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

Image
  சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும் . இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் , திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது . இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும் . வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது .