Posts

Showing posts from 2023

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்)BRIHADEESWARAR TEMPLE

தஞ்சை பெரிய கோவில் (கட்டிடக் கலையின் உன்னதம்)  தஞ்சையில் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் இராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என பலப் பெயர்களில் வழங்கப்படுகிறது. 

இக்கிகய் - நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியம்.

  Ikigai - The Japanese secret to a long and happy life.  இக்கிகய் என்பதன் பொருள் - எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது என்பதாம். 

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள்(ANDAL)

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆண்டாள். இவர் நீல நிறக் கண்ணனின் மேல் தீரா அன்பு கொண்டு அப்பெருமானின் திருவடியை அடைந்தவர். மகாலட்சுமியே ஆண்டாளாக அவதரித்ததாகவும் கூறுவர்.

அரக்கு மாளிகை (ARAKKU MALIGAI)

  பாண்டவர்களும் , கௌரவர்களும் அஸ்தினாபுரத்தில் சிறப்பாக வாழ்ந்து வந்தனர் . அவர்கள் அறிவிலும் , ஆற்றலிலும் சிறப்புடையவர்களாக விளங்கினார்கள் . இதனைக் கண்டு திருதராட்டிரன் , விதுரர் , பீஷ்மர் முதலானோர் பாராட்டினார்கள் .

இராவணன் முன் அனுமன்(HANUMAN STORY)

  அனுமன் பிடிபட்ட செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது . அவன் நற்செய்தி கூறிய தூதுவர்க்கு பரிசளித்தான் . அனுமனைக் கொல்லாமல் கொண்டு வரும் படி ஆணையிட்டான் .

கைகேயி கேட்ட வரம்

       கைகேயின் தோழி கூனி என்கின்ற மந்தரை . அவள் பெரிய அரசியல் தந்திரி . உலகிற்கெல்லாம் துன்பம் செய்யும் இராவணனைக் காட்டிலும் மிகு தீமை செய்யும் கொடுமனக்கூனி தோன்றினாள் , என்று கம்பர் கூறுகிறார் .

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் (MADURAI MEENAKSHIAMMAN TEMPLE)

   மதுரை என்றவுடன் நம் மனக்கண் முன் வருவது மீனாட்சி அம்மன் ஆலயமாகும் . இவ்வாலயம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  மீனாட்சியம்மை தன் திருக்கரங்களில் பச்சைக் கிளியினை ஏந்திய படி நிற்கின்றார் . இக்கிளி பக்தர்களின் வேண்டுதல்களை மீண்டும் மீண்டும் அம்மையிடம் கூறி பக்தர்களின் துயர் தீர உதவுவதாகக் கூறப்படுகிறது . இக்கோயில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் கொண்டுள்ளது. இதன் கருவறை விமானங்கள் இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயிலின் பொற்றாமரைக்குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வீரமங்கை வேலு நாச்சியார்(VELU NACHIYAR)

  ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீரப் பெண் வேலு நாச்சியார் . இவர் இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் . வேலு நாச்சியார் 1730 ம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாகப் பிறந்தார் . அக்காலத்தில் அரச குடும்பத்தினர் மத்தியில் ஆண் வாரிசு வேண்டும் என்கின்ற எண்ணம் மிகுந்திருந்தது . ஆனால் இராஜா செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள்,  தனது ஒரே மகளான வேலு நாச்சியாரை ஆண் குழந்தை போலவே வளர்த்தார் . வேலு நாச்சியாருக்கு தற்காப்பு கலைகள், ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி, வாட்பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றைப் பயில்வித்து அருமையுடன் வளர்த்தார் .

சின்னக் கண்ணனின் குறும்புகள்

ஒரு நாள் யசோதை தன் வீட்டில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் . அப்பொழுது சின்னக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் வந்து தயிர்கடையும் மத்தைப் பிடித்துக் கொண்டு தடுத்தார் . மடியின் மீது வந்து ஏறிய குழந்தையைப் புன்னகையுடன் பார்த்தாள் யசோதை . அப்பொழுது அவள் அடுப்பில் ஏற்றியிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்டதும் பாலக்கிருஷ்ணனை விட்டு விட்டு , வேகமாக பால் பாத்திரத்தை கீழே எடுத்து வைக்கச் சென்றாள் . அதனால் கோபம் கொண்ட சின்னக்கண்ணன் , தயிர் ஏடுள்ள சட்டியை உடைத்து விட்டு , கண்களில் பொய்யாகக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு , வீட்டினுள்ளே ஒருவரும் அறியாத இடத்திற்கு சென்று வெண்ணையை எடுத்து தின்று கொண்டிருந்தார் .

கடல் தாண்டும் அனுமன்(HANUMAN STORY)

  அனுமன் மகேந்திர மலை உச்சியில் விஸ்வரூபம் எடுத்து நின்றான். அவன் மனத்துள் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டான். இலங்கை அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சீதாராமர் திருமணம்(SITA RAMAR THIRUMANAM)

Image
  மிதிலை நகருக்குள் இராமர், இலக்குவர், விசுவாமித்திரர் மூவரும் பிரவேசித்தனர். தன் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த சீதை இராமரை நோக்கினாள்.

அதிபத்த நாயனார்

  சூரிய குலத்தின் மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வரும் வளமிக்க நாடு சோழ நாடு. ஓயாது ஒலிக்கும் கடல் அலைகளின் பேரொலியைக் கொண்ட ஊர் நாகப்பட்டிணம். இவ்வூரின் மக்கள் மீன் பிடிக்கும் தொழிலின் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்தனர். அங்குள்ள நுளைபாடி என்னும் மீனவக் குப்பத்தின் தலைவராக அதிபத்தர் விளங்கினார். அவர் கங்கையையும், பிறைச் சந்திரனையும் தலையில் சூடிய சிவபெருமானுக்குத் தொண்டு புரிபவராவார்.               மீனவத் தலைவரான அவர் பல படகுகளைக் கடலில் செலுத்தி, பல அரிய வகை மீன்களைப் பெறுவார். அவருடைய குடிமக்கள் கடலில் வலை வீசி எண்ணற்ற மீன்களைப் பிடித்து வந்து அவர் முன் குவிப்பர். அவற்றிலிருந்து ஒரு மீனை எடுத்து, அதனைச் சிவபெருமானுக்கே என்று அர்பணிப்பார். எனவே தினம் ஒரு மீனினை மீண்டும் கடலிலே விட்டுவிடுவார்.              இவ்வாறு தினந்தோறும் சிவபெருமானுக்கென்று ஒரு மீனினை உள்ளன்போடு அர்பணித்து வந்தார். சில சமயங்களில் ஒரே ஒரு மீன் கிடைத்த போதிலும், அம்மீனையும் எம்மிறைவன் ஈசன...