ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார் . இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8 ம் தேதியன்று , இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் , பிராங்கு , இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் . இவர் 1959 ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன் , தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார் . பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் .