சின்னக் கண்ணனின் குறும்புகள்
ஒரு நாள் யசோதை தன் வீட்டில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் . அப்பொழுது சின்னக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் வந்து தயிர்கடையும் மத்தைப் பிடித்துக் கொண்டு தடுத்தார் . மடியின் மீது வந்து ஏறிய குழந்தையைப் புன்னகையுடன் பார்த்தாள் யசோதை . அப்பொழுது அவள் அடுப்பில் ஏற்றியிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்டதும் பாலக்கிருஷ்ணனை விட்டு விட்டு , வேகமாக பால் பாத்திரத்தை கீழே எடுத்து வைக்கச் சென்றாள் . அதனால் கோபம் கொண்ட சின்னக்கண்ணன் , தயிர் ஏடுள்ள சட்டியை உடைத்து விட்டு , கண்களில் பொய்யாகக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு , வீட்டினுள்ளே ஒருவரும் அறியாத இடத்திற்கு சென்று வெண்ணையை எடுத்து தின்று கொண்டிருந்தார் .