மதுரை என்றவுடன் நம் மனக்கண் முன் வருவது மீனாட்சி அம்மன் ஆலயமாகும் . இவ்வாலயம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மீனாட்சியம்மை தன் திருக்கரங்களில் பச்சைக் கிளியினை ஏந்திய படி நிற்கின்றார் . இக்கிளி பக்தர்களின் வேண்டுதல்களை மீண்டும் மீண்டும் அம்மையிடம் கூறி பக்தர்களின் துயர் தீர உதவுவதாகக் கூறப்படுகிறது . இக்கோயில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் கொண்டுள்ளது. இதன் கருவறை விமானங்கள் இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயிலின் பொற்றாமரைக்குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.