இராமாயணம்-ஆரண்ய காண்டம் (பகுதி -2) RAMAYANAM- ARANYA KANDAM
இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான். இராவணன் தன் அமைச்சர்களோடு ஆலோசித்தான். பிறன் மனை அபகரிப்பது அழிவில் கொண்டு சேர்க்கும் என அமைச்சர்கள் கூற்றினை இராவணன் ஏற்கவில்லை. இராவணனின் தாய் வழி மாமன் மாரீசன். அவன் விசுவாமித்திரர் யாகம் செய்த போது, தொல்லை செய்ததால் இராமரின் அம்பு பட்டு கடலில் ஒளிந்து கொண்டான்.