திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் . இத்தலம் 365 படிக்கட்டுகளைக் கொண்டு ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கின்றது . இவ்வாலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகும் . அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும் . முருகனின் அறுபடை வீடுகளில் மிகப் பழமையான கோவில் இது என கூறப்படுகிறது . முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் , திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை . இத்தலத்தின் தல விருட்சம் மகுட மரம் ஆகும் . தீர்த்தம் - சரவண பொய்கை , இந்திர தீர்த்தம் , சரஸ்வதி தீர்த்தம் என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த வரலாறு ; திருத்தணி மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் வேடர்கள் குழுவாக ...