திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும் . இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் , திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது . இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும் . வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது .