மச்சாவதாரம் (MACHA AVATHAARAM)
தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சாவதாரம் ஆகும். "உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது, தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் இப்புவியில் அவதாரம் எடுக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர் பரம்பொருள் திருமால். இப்பூவுலகினைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை அவர் எடுத்தார். சிறப்புக்கள் மிக்க திருமாலின் அவதாரங்களை தசாவதாரம் என்று கூறுவர்.