இலட்சுமணனின் வீரமும் தியாகமும்(LAKSHMAN'S SACRIFICE)
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் . இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும் , துணையாகவும் இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் . இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார் . இராமாயணத்தில் கூனியின் துர்போதனையைக் கேட்டு கைகேயி இராமரைப் பதினான்கு வருடம் வனவாசம் செல்லப் பணித்தாள் . இராமர் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல முடிவு செய்த போது , அவருக்குத் துணையாகத் தானும் வருவதாக இலட்சுமணன் கூறினார் . இராமரும் தம் தமையனின் அன்பின் மிகுதியை எண்ணி , இலட்சுமணனைத் தன்னோடு கானகம் அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார் . எனவே சீதா இராமரோடு இலட்சுமணனும் மரவுரி தரித்து , கானகம் புறப்பட்டார். இலட்சுமணன் தன் மனைவியாகிய ஊர்மிளையிடம் , இராமரோடு தான் கானகம் செல்லும் செய்தியைக் கூறினார் . உடனே ஊர்மிளை தானும் இலட்சுமணனோடு வருவதாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள் . அதற்கு இலட்சுமணன் ஊர்மிளையிடம் , தான் இராமருக்கும் , சீதைக்கும் துணையாக கானகம் செல்வதாகவும் , வனத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஆ...