Posts

Showing posts from September, 2025

அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

Image
    இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது . இக்கோவில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக்   கூறப்படுகிறது . கோவிலின் கட்டமைப்பு திராவிடக் கட்டிடக் கலையைக் கொண்டு அமைந்துள்ளது . இக்கோவில் ஏற்காடு ஏரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தலைச்சோலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது . இவ்வழகிய சிவாலயம் வானளாவிய மலைத் தொடர்களுக்கு நடுவே இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிக ரம்மியமாகக் காட்சியளிக்கிறது . இவ்வாலயம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது . மூலவராக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார் . இடப்புறத்தில் விநாயகப் பெருமானும் , வலப்புறத்தில் முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்கள் . இவ்வாலயத்தில் கோபுரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் வண்ண மயமாக காட்சி அளிக்கின்றன . கோபுரங்களில் சிற்ப வேலைப்பாடுகள் திராவிட ...

முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)

Image
  முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும் . இம்மழையானது பெரும்பாலும் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும் . முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அதிகமாக நிகழ்கின்றது . சுமார் இருபது முதல் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது . மிகச் சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால் , இவ்வகை மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கிறது . நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவாவதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . மேக வெடிப்பு காரணங்களாகக் கூறப்படுவன காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமாகி கடுமையான வெப்பச்சலனம் ஏற்படுகிறது . இதனால் இடியுடன் கூடிய புயல் மழை , ஆலங்கட்டி மழை , மேக வெடிப்புகள் ஏற்படுகின்றன . நிலம் சூடாகும் போது நிலத்...