திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)

முருகனின் அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது . இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் " சேயோன் " எனக் குறிப்பிடப்படுகிறது . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000, 3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது . முருகப் பெருமானின் படை வீடுகள் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும் . திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள் . தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் என்றும் , சமஸ்கிருத நூல்களில் ஜெயந்தி புரம் , சிந்துபுரம் என்றும் , பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்தேவி மங்கலம் என்றும் , திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றது . நக்கீரர் , அருணகிரி நாதர் போன்றோர் திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர் . தல வரலாறு அக்காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல ...