காபி பற்றிய சுவையான தகவல்கள் (INTERESTING FACTS ABOUT COFFEE)
நாம் தினமும் காலையில் சுவைத்து மகிழும் காபி , நமக்கு புத்துணர்வையும் , ஆற்றலையும் அளிக்கிறது . காபி முதன் முதலில் எவ்வாறு கண்டறியப்பட்டது என்னும் செய்தி நமக்கு வியப்பையும் , ஆச்சரியத்தையும் அளிக்கலாம் . உலகிலேயே அதிக அளவு இறக்குமதி , ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பெட்ரொலியம் உள்ளது . அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகமாக விற்று , வாங்கக் கூடிய பொருளாக காபி இரண்டாவது இடத்தில் உள்ளது . காபி உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது . இன்று 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கிறது . தினமும் தோராயமாக 2.25 பில்லியன் கோப்பை ( cup) காபிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் சுவைக்கப்படுகின்றன . காபி எவ்வாறு உலகுக்கு அறிமுகமானது ? அந்த சுவையான கதையை இனி பார்ப்போம் . ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் , தங்கள் ஆடுகளில் சில அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும் , இரவிலும் தூங்காமல்...