நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)
மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையே நளதமயந்தி கதை ஆகும். இக்கதையைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் சனி பகவானின் பாதிப்பு குறையும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இனி கதையினுள் செல்வோம். நெடுத நாட்டு மன்னன் வீரசேனன். இவரது மகன் நளன். ஒரு நாள் நளன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவி வந்த போது, ஓர் அழகிய அன்னப்பறவை பறந்து வந்து அவனது அருகில் நின்றது. நளன் அப்பறவையின் அழகினைக் கண்டு வியந்தான். நளன் மேலும் ஆச்சரியம் அடையும் வகையில் அப்பறவை இனிய மொழியில் பேசியது. அன்னப்பறவை நளனிடம் "மன்னா! நீ பேரழகு உடையவனாகவும், அறிவாற்றல் உடையவனாகவும், மக்களின் நலனில் அக்கறை உடையவனாகவும் விளங்குகிறாய். நற்குணங்கள் உள்ள உனக்கு மனைவியாக வரும் பெண்ணும் அழகாகவும், அறிவுடையவளாகவும், குணவதியாகவும் இருக்க வேண்டும். அப்படிபட்டப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் தமயந்தி" என்று கூறியது. மேலும் தமயந்தியின் அழகினை வர்ணித்தது. இதனைக் கேட்ட நளன் தமயந்தியைப் பார்க்காமலேயே அவள் மேல் காதல் கொண்டான். அப்போது அந்த அன்னம் நளனிடம், "தமந்தியிடம் தூது செல்லவா?" எனக் கேட்டது. அதற்கு நளனும் சம்மதம் த...