மயிலாப்பூர் கபாலிஸ்வரர் ஆலயம் (KAPALEESWARAR TEMPLE)

சென்னையில் உள்ள முதன்மையான ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமாகும் . மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது . இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகும் . மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இத்தலம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது . பல்லவர் காலத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் மயிலைக் கபாலீஸ்வரை வணங்கி தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார் . பின்னாளில் 16 ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இக்கோவிலை அழித்து விட்டார்கள் . பல பத்தாண்டுகள் ஆண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது . சப்த சிவத்தலங்கள் மயிலாப்பூர் பகுதியில் ஏழு சிவாலயங்கள் சப்த தலங்களாக உள்ளன . கபாலீஸ்வரர் ஆலயம் , வெள்ளீஸ்வரர் ஆலயம் , காரணீஸ்வரர் ஆலயம் , தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் , விருபாட்சீஸ்வரர் ஆலயம் , வாலீஸ்வரர் ஆலயம் , மல்லீஸ்வரர் ஆல...