மனித மூளை பற்றிய சில தகவல்கள்
மனித உடலில் இதயத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான உறுப்பு மூளை தான். நமது சிந்தனை முழுவதும் இங்கிருந்து தான் தொடங்குகிறது. மனித மூளை பற்றிய சில தகவல்கள்: * நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம் தான். ஆனால் நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது. * நமது மூளை எப்போதும் ஓய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும் போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும் போது கூடுதலாகச் செயல்படும். புதிய செய்திகளைச் சேமிக்க, பழைய செய்திகளை மூளை தானாகவே அழித்துக் கொள்ளூம். * மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. * மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மூளையின் அளவிற்கும், அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இல்லை. * எந்த ஒரு விஷயத்தையும் சரியாகப் பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் பொருட்களை தலைகீழாகவே பதிவு செய்கின்றன. அதனை மூளை சீராக்கி நமக்கு சரியாகக் காட்டுகிறது. * நமது மூளை 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது . ஒரு மின் விளக்கை எரிய வைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளைய...